இங்கே அங்கே பார்க்காமல், நேராக, நடுநிலைமையோடு உண்மையை நோக்கி செல்வதல்லவா உண்மையைத் தேடுபவனின் வேலை? ஒரு கலைஞனால் வரையறுக்கப்பட்ட வடிவத்துக்குள் விஷயத்தை எப்படி சொல்ல முடியும்? வரையறுக்கப்பட்ட வடிவத்திற்குள் விஷயத்தைச் சொல்ல சொல்லி ஒரு கலைஞனைக் கட்டாயப்படுத்தினால், அந்த விஷயத்தின் முக்கியத்துவத்தை எப்படி முழுமையாக சொல்ல முடியும்?
திரையுலகம் தான் கலைஞர்களை உடைமையாக கொண்டிருக்கிறது. கலைஞர்களால் புதிய திரையுலகம் படைக்கப்பட வேண்டுமே ஒழிய, திரையுலகம் கலைஞர்களைப் படைத்தளிக்க முடியாது. திரையுலகம் கலைஞர்களை வெறுமனே அடையாளம் காட்ட முடியும். அவ்வளவே!
கலைக்கும், அரசியலுக்கு மிக நெருக்கமான உறவுகள் இருக்கிறது. திரையுலகத்தால் அரசியல் மாறியதா? அரசியலால் திரையுலகம் மாறியதா? என்று பட்டிமன்றமே வைக்கலாம்.
கலை வளர்ச்சி என்பது சமுதாயத்தின் அடிமட்ட மனிதனோடு பின்னி பிணைந்திருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் கலைகள் நொறுங்கி, நொடுங்கி போகிறதென்றால், அது அரசியல் களத்தில் சிக்கி தவிக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு பெரிய அறிவு ஒன்று தேவையில்லை.
அடிமட்ட மனித அறிவையும், மனதையும் முறைபடுத்தி, நெறிப்படுத்தி, நிலைப்படுத்தி மேம்பட்ட ஒரு சமுதாய அமைப்பிற்குள் கொண்டு வரும் பொறுப்பு கலைகளுக்கு உண்டு. இதை அரசியல் உணர்ந்து கொண்ட போது தான், கலைத்துறையைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஆரம்பித்தது.
விருதுகளும், மானியங்களும் வாரி வழங்கப்பட்டன. கலைஞர்கள் பெயரிலும், புகழிலும் மாட்டி கொண்டு - தம் மக்களுக்கு எடுத்து செல்ல வேண்டிய கருத்துக்களை மறந்து போனார்கள். மேற்தட்டு மக்களின் மன போகத்திற்கு ஏற்ப கலைகள் காரியக்கூடங்களாக மாறின.
Oct 28, 2009
Aug 29, 2009
கேள்விகள் நான்கு
வாழ்க்கை ஏன் வாழ வேண்டும்? என்ற கேள்வியோடு தொடங்குவோம்.
இதற்கான பதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாக இருக்கும்.
அது எக்காலத்தும் அவ்வாறு தான் அமையுமா? என்பதும் கேள்வி குறியோடு நின்று விடுகிறது.
அடுத்ததாக, நான் யார்? என்ற கேள்வி. இதுவும் அசாதாரண கேள்வியாகவே பல காலங்களாக இருந்து வருகிறது.
இதற்கான பதிலும் ஒவ்வொருவருக்கு இடையிலும் மாறிவிட்டிருக்கும். எல்லா காலத்தும் இந்த கேள்வியில் கருத்து வேறுபாடு இருக்குமா?
இருக்கலாம்... இல்லாமலும் போகலாம். சரி! விட்டு விடுவோம்.
இயற்கை மனிதயினத்தையும், பிற உயிர்களையும் எதை நோக்கி நகர்த்தி செல்கிறது?
இதற்கும் பல்வேறு பதில் எழுதப்பட்டிருக்கின்றன, எழுதப்பட இருக்கின்றன.
அடுத்ததாக, இந்த கேள்விகள் எல்லாம் எதற்கு?
இந்த நான்காவது கேள்வி இரண்டு விதமான நபர்களிடமிருந்து வரும். அதாவது, இந்த கேள்விகள் எல்லாம் எதற்கு? இதற்கான பதில்களும் தான் எதற்கு? வாழ்க்கை இருக்கும் வரை வாழ்ந்து விட்டு போவது தானே? என்றெல்லாம் மேலோட்டமாக பேசும் ஆசாமிகள். இவர்களைக் கணக்கில் எடுக்க வேண்டியதில்லை. ஏன் என்றால், இவர்களின் புறநிலைமைகள் மாறும் போது, தானாகவே இந்த கேள்விகளுக்குள் தான் இவர்கள் வருவார்கள்.
ஆனால், அடுத்த வகையினர் --- மேற்கூறிய மூன்று கேள்விகளையும் கேட்டு கேட்டு, எடுத்தாராய்ந்தவர்களாக இருப்பார்கள். இறுதியாக எந்த புறநிலைமை மாற்றத்திலும் அந்த கேள்விகள் தங்களுக்குள் எழாத வகைக்கு தெளிவடைந்து இருப்பார்கள். அதாவது, அந்த கேள்விகளுக்கான பதில்களை உணர்ந்திருப்பார்கள்.
--

Aug 14, 2009
தத்துவம்
மனித பண்பிலேயே தத்துவ சிந்தனைகள் கலந்திருக்கின்றன. தத்துவ கோட்பாடுகள் இல்லாத மனித உயிர்கள் இருக்க முடியுமா? ஒவ்வொருவரின் வாழ்க்கையும், அவரவர் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் சில மதிப்பீடுகளை வரையறை செய்து கொண்டு, அதற்கேற்ற தத்துவ கோட்பாடுகளையும் உருவாக்கி கொள்கிறது.
இவ்வாறான தத்துவ சிந்தனைகள், நடைமுறையில் பல சந்தர்ப்பங்களில் உடைக்கப்படுகின்றன. சிலர் திறந்த மனதோடு கூடிய தத்துவார்த்த ஆராய்ச்சியின் மூலமாகவும் உடைத்து கொள்கிறார்கள்.
ஒருபுறம், பொருட்பற்றை (உயிர்கள் உட்பட அனைத்தும் பொருள்களில் அடங்கும்) கடந்து வர வேண்டும் என்று போதிக்கும் தத்துவம். மறுபுறம், பொருட்பற்றை நீக்கி வாழ்வதால் என்ன பயன் என்ற கேள்வியோடு பொருட்பற்றை முறைப்படுத்த வேண்டும் என்று கூறும் தத்துவம். மற்றொரு புறமோ, பொருட்பற்றினால் துன்பங்களும், போராட்டங்களும் தொடரும் என்றாலும் கூட, பொருட்பற்றை நீக்குதல் சாத்தியமில்லை என்பதால் வாழ்க்கையே போராட்ட களம் தான், நாமும் போராடி தான் வாழ வேண்டும் என்று வாதாடும் தத்துவம்.
இந்த தத்துவங்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை கூட மனிதர்களுக்கு கிடையாது. அதையும் புறநிலையே தீர்மானிக்கிறது, எதுவம் நம்வசம் கிடையாது என்ற புறநிலைவாதிகளின் கூற்றும் இதற்கிடையில் உண்டு. இயற்கையின் பரிணாமத்தில் மனிதன் இயற்கையை உணரும் ஆற்றலைப் பெற்றிருக்கிறான். அதை (அந்த ஆற்றலை) முழுமையாக பயன்படுத்தும் பக்குவத்தை இன்னும் மனிதயினம் அடையவில்லை என்று கூறுபவர்களும் உண்டு.
பன்னெடுங்கால வரலாற்று பின்னரும் மனிதயினம் உண்மையிலேயே முழுமையான பரிணாமத்தை அடையவில்லையா? பதில்கள் பல இருக்கலாம். அவை யதார்த்தத்தோடு பார்க்கப்பட வேண்டும் என்பது தான் என் கோரிக்கை.
தத்துவங்கள் ஏன் விமர்சிக்கப்படுகின்றன? யதார்த்த தத்துவங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. மற்றவை மறைமுகமாக நிராகரிக்கப்படுகி்ன்றன. யதார்த்தம் அதாவது நிகழ்காலம் மாறிக் கொண்டே இருக்கிறது. ஆகவே தத்துவங்களும் மாறிக்கொண்டே இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றன. ஆகவே, அவை தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகின்றன.

Aug 10, 2009
அரசியலும், சமுதாயமும்
அரசியலும், சமுதாய கட்டமைப்பும் அறிவுக்கு பொருத்தமற்றதாகிவிடும் போது அது மதிப்பிழந்து விடுகிறது; தூக்கி எறியப்படுகிறது.
மக்களை பாதுகாப்பாகவும், ஒற்றுமையாகவும் வாழ வைக்காத சமுதாயம், அரசாங்கம் தொடர்ந்து நீடிக்க முடியாது. அழிவுபட்டு போகும்.
காலத்தின் வளர்ச்சி போக்கின் போது முன்னர் மெய்யாக இருந்த பல விஷயங்கள் தேவையற்றதாக, போலித்தோற்றமாக மாறிவிடுகின்றன. அவை இருந்து செயல்பட வேண்டிய அவசியத்தை அவை முற்றிலுமாக இழந்து விடுகின்றன.
மனித வரலாற்றுத் துறையில் மெய்யாக இருக்கின்ற அனைத்தும் கால வளர்ச்சிப்போக்கில் அறிவுக்குப் புறம்பானவையாக மாறி விடுகின்றன.
முழு நிறைவான சமூகம், முழு நிறைவான "அரசு" என்பவை கற்பனையில் மட்டுமே இருக்கக் கூடியவை. ஆனால், கீழ்நிலையிலிருந்து உயர்நிலைக்கு என்ற வகையில் சமுதாயம் கொண்டு செல்லப்படுகிறது. இது இயற்கை விதியாகிறது. இந்த வரலாற்று நிகழ்முறையில் ஒவ்வொரு காலப்பகுதியும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கின்றன. மனிதர்கள் தம்மைத்தாமே கீழ்நிலையில் இருந்து உயர்நிலைக்கு கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும். அதுதான் இயற்கை விதிக்கு உட்பட்ட வாழ்வாகிறது.
இயற்கை எந்த தத்துவத்திற்கும் கட்டுப்பட்டதல்ல, ஆகவே இயற்கையில் இருந்து உருவாகி இருக்கும் மனிதனும் எந்த தத்துவத்திற்கும் உட்பட்டிருக்க விரும்புவதில்லை.
மனிதன் சமுதாய விதிகளுக்கும் கூட கட்டுப்பட விரும்புவதில்லை. ஆனால் இயற்கை விதிகள் மனித அறிவுக்கு முற்றிலுமாக வந்து சேராத காரணத்தினாலேயே, மனிதனை சமுதாய விதிகளுக்கு கட்டுப்படுத்தி வைக்க வேண்டியிருந்தது.
ஆனால் இன்றைய விஞ்ஞானம், மனிதர்களின் அடுத்த கட்ட அறிவு வளர்ச்சிக்கு இட்டு சென்றுள்ளது. அதற்கேற்ப சமுதாய சீர்திருத்தம் அவசியப்படுகிறது. சமுதாய சீர்திருத்தத்தின் அடிப்படை அரசியல், பொருளாதார சீர்திருத்தமன்றி வேறென்ன?

Feb 12, 2009
வலிமைக்கு மார்க்கம் 5
ஒரு மனிதன் ஓர் இருட்டறைக்குள் போய் அதன் கதவை அடைத்துக் கொண்டு உலகத்தில் ஒளி என்பதே இல்லை என்று சொல்லலாம்; ஆனால், ஒளி, வெளியில் எங்கும் நிறைந்திருக்கிறது; இருள் அவனுடைய சிறிய அறையில் மட்டுமே இருக்கிறது. அப்படியே நீங்களும் மெய்ப்பொருளின் ஒளி உங்கள் மீது படாமல் மறைத்துக் கொள்ளலாம்; அல்லது உங்களைச் சூழ்ந்து கொண்டிருக்கிற வெறுப்பு, சுயநலம், பாவம் முதலிய மதில்களை இடித்துச் எல்லாயிடத்திலும் நிறைந்திருக்கும் பேரொளியைக் காண்பதற்கு தொடங்கலாம்.
நீங்கள் உங்களை ஆண்மையோடு ஆராய்ந்து பார்த்து துன்பமானது கழிந்து போகும் ஒரு நிலைமை என்றும், அஃது உங்களால் உண்டு பண்ணப்பட்டது என்றும், உங்களுடைய சகல கேடுகளும், துன்பங்களும், துக்கங்களும், சிறிதும் பிழையாத ஒரு சட்டப்படி உங்களிடம் வந்திருக்கின்றன என்றும், அவற்றை நீங்கள் விரும்புவதாலும், அவற்றை நீங்கள் அடைவதற்கு அடைவதற்கான தகுதி உங்களிடம் உண்டு என்பதாலும், அவை உங்களைச் சார்ந்திருக்கின்றன என்றும், அவற்றை முன்னர் அனுபவித்து பின்னர் அறிவதால் நீங்கள் மிக்க பலமும் ஞானமும் மேம்பாடும் அடைவீர்களென்றும் நீங்கள் தெளிவாக அறியுங்கள். அந்த தெளிவான ஞானத்தை நீங்கள் பூர்த்தியாக அடைந்த பொழுது, நீங்கள் உங்கள் நிலைமைகளைத் திருத்திக் கொள்ளவும், சகல துன்பங்களையும் இன்பங்களாக மாற்றிக் கொள்ளவும், உங்கள் ஊழை விலக்கி கொள்ளவும் வல்லவர்களாவீர்கள்.
(முதல் அத்தியாயம் முடிந்தது. அடுத்தது தொடரும்...)

Subscribe to:
Posts (Atom)