Mar 18, 2008

சங்க இலக்கிய வினா-விடை - 1

1. எட்டுத்தொகை நூல்களில் ஒன்று

அ) திருக்குறள் ஆ) பதிற்றுப்பத்து இ) மதுரை காஞ்சி ஈ) நெடுநல்வாடை

2. கலித்தொகையில் குறிஞ்சித்திணைப் பாடல்களைப் பாடியவர்

அ) பரணர் ஆ) ஔவை இ) ஓதலாந்தையார் ஈ) கபிலர்

3. தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்கள்

அ) 2 ஆ) 5 இ) 4 ஈ) 3

4. தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் இடம் பெற்றுள்ள இயல்களின் எண்ணிக்கை

அ) 8 ஆ) 9 இ) 7 ஈ) 6

5) திருவிளையாடல் திரைப்படத்தில் இடம்பெறும் சங்கப்பாடல்

அ) கொங்குதேர் வாழ்க்கை.....
ஆ) யாயும் ஞாயும் யாராகியரோ.....
இ) இலங்கொளி மருப்பிற் கைம்மா உளம்புநர்......
ஈ) மண் திணிந்த நிலனும், நிலம் ஏந்திய விசும்பும்......







விடை:

1) ஆ 2) ஈ 3) ஈ 4) ஆ 5) அ

0 comments: